Type to search

சிலாபத்தில் சூனியக்காரர் செய்த சில்மிசம்

NEWS Trending

சிலாபத்தில் சூனியக்காரர் செய்த சில்மிசம்

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

(Silimism made sorcery Chilaw)
வெசாக் தினத்தின் விசேடமான சுபநேரத்தில் பிள்ளைகள் கிடைக்காத தாய்மார்களுக்கு பிள்ளைகள் கிடைக்கும் வரமும், குடும்பங்களில் ஏற்படும் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வும் பெற்றுத் தருவதாகவும், பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களை குணப்படுத்துவதாகவும் கூறி பணம் பெற்று பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்த போலி சூனியக்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இணையதளம் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பல காலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 30 வயதான இந்தச் சந்தேக நபர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலேவெல கலபாமுல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வசித்துவரும் பெண் ஒருவரின் உதவியுடன் அறையொன்றில் பூஜைகளை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் பிள்ளைகள் அற்ற குடும்பப் பெண்களையும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளினால் துன்பப்படும் பெண்களையும் தனது பூஜை அறைக்கு வரவழைத்து தனிமைப்படுத்தி எண்ணெய் பூசுவதாகக் கூறி, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார்.

இவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட இரு பெண்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைபாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சூனியக்காரரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சூனியக்காரரை பெண்ணொருவர் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பலரின் நோய்களை குணமாக்கியுள்ளதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 30 வயதான சந்தேக நபரை தம்புள்ளை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Silimism made sorcery Chilaw


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *