உணவில் உப்பு காரம் கூடிவிட்டால் என்ன செய்வது?

0
804
Salt Spicy Increase Cure Kitchen Tips Tamil, Salt Spicy Increase Cure Kitchen Tips, Salt Spicy Increase Cure Kitchen, Salt Spicy Increase, Salt Spicy
Photo Credit : pinterest.co.uk

(Salt Spicy Increase Cure Kitchen Tips Tamil)

குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாகிவிட்டால் வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.

ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு ரசத்தைக் கொதிக்க விடவும். பிறகு மிளகு, சீரகத்தூள் போட்டு, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விட, சுவை சரியாக இருக்கும்.

குழம்பு, சாம்பார், ரசம் போன்றவற்றில் நெய்யோ, எண்ணெய்யோ சேர்த்தால் காரம் குறைந்து சுவையும் மணமும் கூடி விடும்.

இட்லி, தோசை மாவில் உப்பு அதிகமானால் ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து ஐந்து நிமிடம் பாலில் ஊறவிட்டு பின் மாவுடன் சேர்க்க உப்பு குறைந்து சரியாகவிடும்.

பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால் தேங்காயைத் துருவி சேர்த்தால் போதும். உப்பு குறைந்துவிடும்.

மட்டர் பன்னீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் ஃபிரெஷ் க்ரீம் அல்லது சூடான பாலில் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்துவிட காரம் குறைந்து சுவை அதிகமாகிவிடும்.

வற்றல் குழம்பு, காரக்குழம்பு போன்றவற்றில் தக்காளியை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்து சுவை கூடிவிடும்.

புலாவ், பிரியாணி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் பிரட் தூள் ஒரு கரண்டி எடுத்து வெறும் வாணலியில் ஒரு நிமிடம் சூடாக்கி பின் சேர்த்துவிட்டால் காரம் குறைந்துவிடும்.

இரண்டு தேக்கரண்டி அரிசி, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு இரண்டையும் அரைமணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்துவிட உப்பு சரியாகிவிடும்.

கலவை சாதத்தில் காரம் அதிகமாகிவிட்டால் எண்ணெய் ஒரு தேக்கரண்டி காய்ச்சி ஊற்றிக் கலந்துவிட்டு, பின் வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்துத் தூளாக்கி தூவி பரிமாற காரம் குறைந்துவிடும்.

பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால் அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணலியில் வறுத்துப் பொடித்துச் சேர்க்க உப்பு குறைந்துவிடும்.

வறுவல், பொரியல் போன்றவற்றில் ரஸ்க்கைத் தூள் செய்து தூவிவிட்டால் காரம் குறைந்துவிடும்.

மசாலாவில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது தயிரைக் கடைந்து சேர்க்கலாம் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்தால் போதும். காரம் குறைந்துவிடும்.

<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>
நாவில் எச்சில் ஊற வைக்கும் ஆட்டுக் குடல் குழம்பு
காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்
சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

 

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
Web Title : Salt Spicy Increase Cure Kitchen Tips Tamil