தமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா?

0
15913
LTTE founded May 5 1976

(LTTE founded May 5 1976)
இன்று உலக வரலாற்றில் தமிழ் இனத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட விசேடமான பக்கத்துக்கு பிள்ளையார்சுழி வைக்கப்பட்ட நாள்.

ஆம்! காலம் காலமாக அந்நிய இனத்துக்கு அடிமைப்பட்டு கிடந்த தமிழர்களின் வாழ்வில் புதிய புத்தெழுச்சியை ஏற்படுத்திய ஒரு விடுதலை இயக்கம் இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை அரசின் மீது அதிருப்தி அடைந்த இளைஞர்கள் கூட்டாக ஆரம்பித்த இந்த விடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் தாமாக முன்வந்து அதில் இணைந்து கொண்டனர்.

1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை இக்காலப்பகுதியில் புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.

விடுதலைப்பயணத்தில் இலங்கை இராணுவம் மீது பதுங்கி தாக்கும் கெரில்லா முறை தாக்குதல்களை மேற்கொண்டு பல வெற்றிகளை பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமானது மரபு வழி இராணுவம் ஒன்றுக்குரிய ஆயத்தங்களுடன் வளர்ச்சி கண்டது.

இலங்கை இராணுவம் மட்டுமன்றி , இந்திய படைகளுக்கும் மிக முக்கிய சிம்ம சொப்பன தாகுதல்களை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்த வேளை விடுதலிப்புலிகள் தமது பலத்தை சரியாக நிரூபணம் செய்தனர்.

1990 களின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு நவீன மயப்படுத்தப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய இராணுவமாக உருவாக்கம் பெற்றது.

பல இராணுவ கட்டமைப்புகளையும் , நிர்வாக பிரிவுகளையும் கொண்டதாக விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் தலைவராகிய வே பிரபாகரன் தலைமையில் வீறு நடைபோட்டது.

அதன் பிரதான கட்டமைப்புகளை கீழே உள்ளவாறு வகைப்படுத்த முடியும்.

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
இம்ரான் பாண்டியன் படையணி
ஜெயந்தன் படையணி
கடற்புலிகள்
வான்புலிகள்
லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி
மாலதி படையணி (பெண்புலிகள்)
சோதியா படையணி (பெண்புலிகள்) – மகளிர் படையணியில் முதன் முதல் உருவாகிய படையணி
அன்பரசி படையணி (பெண்புலிகள்)
சிறுத்தைகள்
கரும்புலிகள்
கடற்கரும்புலிகள்
கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி
லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி
லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி
எல்லைப் படை
துணைப்படை
வழங்கற் பிரிவு
மருத்துவப் பிரிவு
கொள்முதல் பிரிவு
பரப்புரைப் பிரிவு

இதைவிடவும் பல மக்கள் நிர்வாக பிரிவுகளையும் புலிகள் சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தனர்.

இத்தகைய பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் இயக்கம் தனி நாடாகிய தமிழீழம் என்னும் தளராத கொள்கை நோக்கி வீறுநடை போட தொடங்கிய பின்னர் தமிழ் மக்கள் என்னும் இனம் உலக அளவில் பிரபலம் அடைய தொடங்கியது.

அதுமட்டுமன்றி , உலக அரங்கில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வரவும் தொடங்கியது.

உலக அளவில் தமிழ் மக்களின் நிலையை மாற்றிய ஒரு விடுதலை இயக்கத்தின் ஆரம்ப நாளில் அதன் வெற்றிகளையும் , அதற்கு உயிர் கொடுத்த உத்தமர்களையும் உணர்வுடன் நினைவு கூறுவோம்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்!
மனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு
பால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு
அபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை
துப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு

Time Tamil News Group websites :

Tags:LTTE founded May 5 1976,LTTE founded May 5 1976