பிரான்ஸ் தொழிலாளர்களின் அடுத்த அதிரடி!

0
807
SNCF strike reached President Elysee palace

SNCF தொழிலாளர்களின் 3 தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் நேரடியாக உரையாற்றுவதற்காக எலிசே அரண்மனைக்கு சென்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். SNCF strike reached President Elysee palace

இவர்கள், Pamiers பகுதியிலிருந்து பரிஸ் எலிசே அரண்மனையை நோக்கி 720Km நடந்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Sébastien Phalippou, Régis Rousse மற்றும் Patrick Viac ஆகியோர் SNCF சீர்திருத்தங்களுக்கு எதிராக பரந்த வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக 720km நடைப்பயணம் மேற்கொண்டனர்.

அவர்களது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஒரு மனுவை அவர்கள் 4,700 தொழிலாளர்களின் கையெழுத்துக்களுடன் சமர்ப்பித்தனர்.

அவர்கள் பரிஸை சென்றடைந்தபோது, ​​அவர்களின் நடைப்பயணத்திற்கு ஆதரவாக 40 பேர் இணைந்தனர். இறுதியில், ஜனாதிபதி அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த மூவரும் ஜனாதிபதியின் இரு ஆலோசகர்களுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.

ரயில்வே சீர்திருத்தங்கள், புனரமைப்புகள் மற்றும் SNCF பின் தொழிலாளர்களின் குறைகளை பற்றி அவர்கள் பேசினர்.

மேலும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகள், மருத்துவமனை தாமதங்கள், பொதுச் சேவைகள் மற்றும் கைவிடப்பட்ட கிராமப்புற பகுதிகள் பற்றியும், மற்றவர்களிடமிருந்து கேட்டறிந்த பிரச்சினைகள் பற்றியும் மூவரும் பேசினர்.

இதனை செவிமடுத்த ஒரு ஆலோசகர், குறிப்புகளை எடுத்துக் கொண்டு, இந்த பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாக கூறினர்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**