ஏர் பிரான்ஸ்-KLM குழுமம் கை மாறியது!

0
582

ஏர் பிரான்ஸ்-KLM குழுமம் செவ்வாயன்று புதிய தலைவர்களை நியமித்தது, ஏர் பிரான்ஸ்-KLM குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி Frederic Gagey அதன் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக, செவ்வாயன்று (நேற்று) நியமிக்கப்பட்டார்.Air France- KLM appointed new staffs

ஊழியர்களின் ஊதியங்கள் மீதான கசப்பான மோதலினால் Jean-Marc Janaillac திடீரென்று ஏர் பிரான்ஸ்-KLM குழுமத்திலிருந்து விலகினார்.

இதனால் ஏற்பட்ட கடுமையான தொழில்துறை மோதல்களினால் 300 மில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு Frederic Gagey இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக, நியமிக்கப்பட்டார்.

61 வயதான Gagey, புதிய நிர்வாகக் குழுவில், முறையே பிரெஞ்சு மற்றும் டச்சு நடவடிக்கைகளின் CEO களான ஃபிராங்க் டெர்னர் மற்றும் பீட்டர் எல்பர்ஸ் ஆகியோரின் பிரதிநிதியாக செயல்படுவார்.

பிப்ரவரி முதல் வேலைநிறுத்தங்கள் காரணமாக குறைந்தபட்சம் 300 மில்லியன் யூரோக்கள் ($ 356 மில்லியன்) செலவாகிறது. ஆனால் ஊதியம் தொடர்பில் ஒரு வழி கண்டுபிடிக்க தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு உத்தரவு இல்லை என்று குழு சுட்டிக்காட்டியது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த Janaillac “ஏர் பிரான்ஸ் அதன் வரலாற்றில் மிகக் கடினமான நெருக்கடிகளில் இருக்கிறது” என்று கூறினார்.

மேலும், இந்த மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நெருக்கடிகள், வேலைநிறுத்தங்கள், முரண்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் குழுமத்திற்குள் பெரும் பிரிவினைகளை ஏற்படுத்தி விட்டது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், ஏர் பிரான்ஸ்க்கு என வாடிக்கையாளர்களிடமிருந்த பெயரையும் மாற்றி விட்டது.

2016 இலிருந்து வலுவான ஒரு நிர்வாகத்தை அவர் உருவாக்கியிருப்பதாகவும், இதனால் ஏர் பிரான்ஸ் நிர்வாகம் வளர்ச்சி அடைந்ததுடன், வெற்றிகரமான வருவாயை ஈட்டியது எனவும் இந்த வேலைநிறுத்தங்கள் குழுவின் நிதி முடிவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் ஏர் பிரான்ஸ்-KLM குழுமத்தின் நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**