சர்ச்சைக்குரிய இஸ்லாமிய வீடியோவை ஆராயும் சுவிஸ் நீதிமன்றம்

0
618
Swiss court rule controversial Islamist video, Swiss court rule controversial Islamist, Swiss court rule controversial, Swiss court rule, Tamil Swiss News, Swiss Tamil news

(Swiss court rule controversial Islamist video)

சுவிட்சர்லாந்தில் உள்ள அடிப்படைவாத இஸ்லாமிய மத்திய குழுவின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் இஸ்லாமிய போர்க்குணமிக்க அல் கொய்தா அமைப்புக்கு சார்பாக, சட்டவிரோதமாக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

2015ம் ஆண்டு சிரியாவில் உள்ள சுவிஸ் குழு உறுப்பினரான Naim Cherni, சவுதி மதகுருவாயிருக்கும் போராளி Abdullah al-Muhaysini உடன் நடத்திய வீடியோ நேர்காணலானது சட்டத்திற்கு முரணானது என பெடரல் குற்றவியல் நீதிமன்றம் கருதுகிறது.

வீடியோ YouTube சமூக ஊடக சேனலில் வெளியிடப்பட்டது எனவும் மத்திய கவுன்சிலின் உறுப்பினர்கள் அதை தீவிரமாக ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டினர்.

பத்திரிகை கொள்கைகளுக்கு எதிராக இந்த பேட்டி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது வழங்கப்பட்ட 35 நிமிடங்களில், பேட்டியாளர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார் எனவும், மிகுதி நேரத்தில் சவுதி மதகுரு பேசியதாகவும் கூறப்படுகிறது. அதாவது மதகுரு அப்பேட்டியினை இஸ்லாமிய அமைப்புக்கான ஒரு பிரச்சார தளமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குற்றவாளிகள் இந்த வழக்கு விசாரணையை அரசியல் ரீதியாக நிராகரித்ததோடு நீதிமன்றத்தில் அமைதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவதால், மாத இறுதிக்குள் ஒரு தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Swiss court rule controversial Islamist video, Swiss court rule controversial Islamist, Swiss court rule controversial, Swiss court rule, Tamil Swis News, Swiss Tamil news

Tamil News Groups Websites