காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் உறவுகளுடனான பாசம் பகிரும் பயணம் மாணவர்கள், மூத்தோர்க்கு உதவிகள்

0
455
tamilnews Mindfulness Kandal Diaspora Relationship Young People

(tamilnews Mindfulness Kandal Diaspora Relationship Young People)

முல்லைத்தீவு – தேவிபுரம் பகுதியில், காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பினரின் உறவுகளுடனாக பாசம் பகிரும் செயற்றிட்டமானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகிய 18.05.2018 நேற்றையதினம் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில். முள்ளிவாய்க்காலில் மரணித்த எமது உறவுகளுக்கான நினைவேந்தல் அஞ்சலிகளோடு குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் உறவுகளுடனான பாசம் பகிரும் செயற்றிட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூத்தோர் 160 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டன.

அத்தோடு தெரிவுசெய்யப்பட்ட பள்ளி மாணவர்கள் ஐம்பது பேருக்கு தலா 3000 ரூபாய் வீதம் பண உதவியும் வழங்கப்பட்டது.

குறித்த பணத் தொகையினை மாணவர்களின் வைப்பகக்கணக்கில் மாதாந்தம் வைப்பிலிடுவதெனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காந்தள் அமைப்பினரால் மதிய விருந்தோம்பலும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் ஆண்டியையா புவனேசுவரன் ஆகியோரோடு கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்திருந்தனர்.

இந் நிகழ்வில் மூத்தோர், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் காந்தள் அமைப்பின் உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews Mindfulness Kandal Diaspora Relationship Young People)

More Tamil News

Tamil News Group websites :