16 பேரும் மஹிந்தவை தலைவராக ஏற்க இணக்கம் : பேச்சுவார்த்தை வெற்றி என்கின்றனர்

0
939
16 slfp members mahinda rajapaksa meeting

(16 slfp members mahinda rajapaksa meeting)
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று மாலை கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள தாம் இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கிறார். கூட்டு எதிரணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில், கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இணைந்து செயற்படுவோம்.

இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது, மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். இரண்டு பேருமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தான்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Tags:16 slfp members mahinda rajapaksa meeting,16 slfp members mahinda rajapaksa meeting