கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு இனி எளிமையான ஆடை வழங்கப்படும் – கல்வியமைச்சர்

0
5057
tamilnews Comfortable attire allowed expectant teachers tomorrow

(tamilnews Comfortable attire allowed expectant teachers tomorrow)

அரச பாடசாலைகளில் கடமை புரியும் கர்ப்பிணி ஆசிரியர்கள் எளிமையான ஆடைகளை அணிந்து கடமைக்கு செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு நாளை (24) இடம்பெறவுள்ளது.

வைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் உடலுக்கு மிகவும் எளிமையான வசதியான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் புதிய திட்டத்தினால் வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் 236,000 ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் அதில் 172,000 பேர் ஆசிரியைகள் எனவும் இவர்களில் சுமார் 10,000 பேர் வருடம் ஒன்றிற்கு கர்ப்ப கால விடுமுறைக்காக விண்ணப்பிப்பதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு நாளை முதல் இந்த எளிமையான ஆடையை அணிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews Comfortable attire allowed expectant teachers tomorrow)

More Tamil News

Tamil News Group websites :