பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!

0
827
Petrol&diesel prices will affect people's health benefits - Nitin Gadkari

Petrol&diesel prices will affect people’s health benefits – Nitin Gadkari

பெட்ரோல், டீசல் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால், அதிக விலைக்குக் கொள்முதல் செய்து இங்கு மானியத்துடன்தான் விற்பனை செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால், இதர மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.

மேலும் கிராமங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, கிராமப் புற நலத் திட்டங்கள், முத்ரா கடன் திட்டங்கள் போன்றவை பாதிக்கும் என நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதற்கிடையே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இடையே அதிருப்தி எழுந்துள்ள நிலையில், அதனைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :