2ஜி வழக்கில் மேன்முறையீடு – சி.பி.ஐ. மனு மீதான விசாரணை ஒத்திவைத்தது டெல்லி மேல்நீதிமன்றம்

0
410
2G case CBI oppose release Delhi Courts postponed inquest appeal petition

2G case CBI oppose release Delhi Courts postponed inquest appeal petition

2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி எம்.பி. விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் தொடரப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு டெல்லி மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதை எதிர்த்து, சி.பி.ஐ.யும் இந்திய மத்திய அமுலாகத்துறையும் டெல்லி மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடு மனு தாக்கல் செய்தன.

இதில் சி.பி.ஐ. மனு நீதிபதி எஸ்.பி.கார்க் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வாதிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘2ஜி அலைக்கற்றை முறைகேட்டால் மத்திய அரசுக்கு மிகப்பெரும் அளவில் இழப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த ஊழல் நாட்டுக்கே தலைகுனிவாகவும் அமைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் தாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். எனவே இதை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டுள்ளார்.

இதையடுத்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கும் அமுலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் திகதிக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்துள்ளது.

2G case CBI oppose release Delhi Courts postponed inquest appeal petition

More Tamil News

Tamil News Group websites :