அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார்கள் – ஜனாதிபதி நம்பிக்கை

0
387
five country ambassadress appoint president maithripala

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் தங்களது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். five country ambassadress appoint president maithripala

இவர்கள் நேற்றைய தினதினம் அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகரும் சுவீடன், பின்லாந்து, சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதுவர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய,
01- Mr. Ermindo Augusto Ferreira– மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகர்
02- Mr. Klas Molin– சுவீடன் தூதுவர்
03- Mr. Harri Kamarainen – பின்லாந்து தூதுவர்
04- Mr. Abdulnaser H.Al Harthi – சவூதி அரேபிய தூதுவர்
05- Mr. Augusto Montiel – வெனிசுலா தூதுவர்

நிகழ்வின்போது புதிய இராஜதந்திரிகளிடையே உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையுடன் நாட்டின் அபிவிருத்திக்காக உலகின் சகல நட்பு நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் தமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
five country ambassadress appoint president maithripala

More Tamil News

Tamil News Group websites :