சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட டாக்டர் மகாதீர் உறுதி!

0
881
Malaysia high speed rail project, malaysia tami news, malaysia, malaysia news, Malaysia high speed,

{ Malaysia high speed rail project }

மலேசியா: கோலாலம்பூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிடத் தாம் உறுதிபூண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

Financial Timesசுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் அதனைத் தெரிவித்ததாக, Today செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது.

அரசாங்கச் செலவையும், முதலீடுகளையும் குறைக்க டாக்டர் மகாதீர் திட்டமிடுகின்றார்.

மலேசியா நொடித்துப் போவதைத் தவிர்ப்பதற்காகவே ரயில் திட்டத்தைக் கைவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

110 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அதிவேக ரயில் திட்டம் உள்ளிட்ட சில தேவையற்ற திட்டங்களைக் கைவிட வேண்டிய தேவை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு அந்த அதிவேக ரயில் திட்டத்தால் ஒற்றைக்காசு இலாபமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிதி நிலையை மேம்படுத்துவதே தமது முதன்மையான குறிக்கோள் என டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

மலேசிய அரசாங்கம் தனது நிதி நிலையைச் சீரமைக்க முயலும் அதேவேளையில், ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும், சட்டத்தின் ஆட்சியையும் அது மதித்து நடக்கும் என்றார் அவர்.

அதிவேக ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை மலேசியா சிங்கப்பூருடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது.

என்றாலும், அதைக் கைவிடுவதன் தொடர்பில் சிங்கப்பூருடன் பேச்சு நடத்தப்படும் என்றார் அவர்.

இதற்கிடையே, டாக்டர் மகாதீரின் கருத்து பற்றி சிங்கப்பூர்ப் போக்குவரவு அமைச்சிடம் விளக்கம் கேட்டிருப்பதாக Today செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ள்ளது.

Tags: Malaysia high speed rail project

<< RELATED MALAYSIA NEWS>>

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

<< RELATED MALAYSIA NEWS>>