ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

0
765
Malaysia indonesia try find Jamal Yunus, malaysia tami news, malaysia, malaysia news, Jamal Yunus,

{ Malaysia indonesia try find Jamal Yunus }

மலேசியா: கரிமுன் தீவில் தலைமறைவாகியுள்ளார் என கருதப்படும் ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனிசியாவின் உதவியை நாடுவோம் என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறியுள்ளார்.

“ஜமாலின் மீது உள்ள குற்றங்கள் நிரூபிக்கபட்டால் அவர் மலேசியாவில் தண்டிக்கப்படுவார். அவர் இந்தோனிசியாவில் இருப்பதாக நம்பப்படுவதால் அவரைக் கண்டுபிடிக்க இந்தோனிசியா அதிகாரிகளின் ஒத்துழைப்பை நாடி உள்ளோம்,” என்றார் அவர்.

நேற்று சாஹாடா மசூதியில் நிகழ்ந்த நோன்பு துறப்பு விழாவில் காஜாங் சிறைச்சாலை ஊழியர்களோடு கலந்துக் கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மொகிடின் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜமாலை கண்டுபிடிக்குமாறு தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புஷி ஹருணைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்தோடு, சுங்கை பெசார் அம்னோ பிரிவு தலைவர் ஜமால் போலீஸாரால் தவறாக நடத்தப்பட மாட்டார் என்பதையும் அவர் உறுதிபடுத்தியுள்ளார்.

“என்ன பாதுகாப்பு வழங்குவது? அவர் குற்றங்களைச் செய்திருக்கின்றார் என்பதை அறிந்ததால் தான் அவர் ஓடிவிட்டார்,” என மொகிடின் கூறியுள்ளார்.

ஜமால் ஆறு வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவற்றுள் கடந்த வருடம் பொது மக்களுக்கு தொல்லைத் தரும் வகையில் மதுபான பாட்டில்களை சிலாங்கூர் அரசாங்க செயலகத்தின் நுழைவாயிலில் உடைத்த குற்றமும் இதில் அடங்கும்.

Tags: Malaysia indonesia try find Jamal Yunus

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!

*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!

*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!

*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>