‘அக்னி 5’ ஏவுகணை சோதனை வெற்றி

0
399
Agni-5 missile successfully tested successfully Abdul Kalam Island Odisha

Agni-5 missile successfully tested successfully Abdul Kalam Island Odisha

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அக்னி 5’ ஏவுகணை  நேற்று ஒடிஸா மாநிலத்திலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இது குறித்து இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

அக்னி 5 ஏவுகணை சோதனை நேற்றுக் காலை 9.48 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டது. 17 மீட்டர் நீளம், 2 மீற்றர் அகலம் கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது. சராசரியாக 5,000 கி.மீ. தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 8.000 முதல் 10,000 கி.மீ. வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.

700 கி.மீ. வரை சென்று தாக்கக்கூடிய அக்னி 1, 2,000 கி.மீ. வரை சென்று தாக்கும் அக்னி 2, 3,500 கி.மீ. வரை சென்று தாக்கும் அக்னி 3, 4 ஆகியவையும் இவற்றுடன் பிரம்மோஸ் சூப்பர்ஸானிக் ரக ஏவுகணைகளும் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.

Agni-5 missile successfully tested successfully Abdul Kalam Island Odisha

More Tamil News

Tamil News Group websites :