IS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை!

0
705
French Islamic State group woman jailed lifetime

IS குழுவின் உறுப்பினராக இருப்பதனால் பிரான்ஸை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈராக்கிய நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.French Islamic State group woman jailed lifetime

நாட்டிற்குள் “சட்டவிரோதமான” நுழைவுக்காக, 4 வயது பிள்ளைக்கு தாயான Melina Boughedir (27 வயது) கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஏழு மாதங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், மீண்டும் பிரான்ஸிற்கு திரும்ப நாடு கடத்தப்படவிருந்தார்.

ஆனால் மற்றொரு நீதிமன்றம் குறித்த பெண் IS க்கு சொந்தமான குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதால் ஈராக்கின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக குறித்த பெண் தான் குற்றமற்றவள் எனவும், அவளுடைய கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு, குழந்தைகளுடன் வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகவும் பிரெஞ்சு நீதிபதியிடம் கூறினார்.

மேலும், அவளது கணவர் IS இல் சேர்வதற்காக திட்டமிட்டிருந்தார். இதனாலே ஈராக்கில் வசிக்க வேண்டியதாகவும், தன கணவரின் வழியில் செல்ல வேண்டியதாகவும் ஏற்பட்டதாக கூறினார். ஆனால் தான் IS இன் கொள்கைக்கு எதிரானவள் எனவும், கணவரின் செயற்பாடுகளை தான் எதிர்ப்பதாகவும் கூறினார்.

அவளது ஈராக் வழக்கறிஞர், அவளது கணவர் ஒரு குற்றவாளியை போல அப்பெண்ணை சித்ரவதை செய்ததாகவும், ஈராக்கிற்கு வருமாறு அவளை கட்டாயப்படுத்தி அழைத்ததாகவும் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதனை ஏற்காத நீதிமன்றம், குறித்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**