நஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்!

0
755
First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide Pon Sivakumaran

இலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide Pon Sivakumaran

ஆனால் ஒரு கால கட்டத்தில் அன்றைய தமிழ் மாணவர் சமுதாயம் பேரினவாத அரசு ஒன்றுடனான சமரச முயற்சிகளின் வீண் போக்கை சரியாக அறிந்து கொண்டபின்னர் அவர்களின் போராட்ட வடிவம் ஆயுதம் ஏந்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

உலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு புதிய பாதை ஒன்றில் நடக்க தொடங்கிய அன்றைய இளைய சமுதாயத்தில் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று மாணவர்களாக இருந்த தேசியத் தலைவரும் அவர் தம் தோழர்களுமே.

இவர்களில் முதன்மையானவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, இன விடுதலை என்னும் எண்ணக்கரு இவரின் மனதில் முளை விட தொடங்கியிருந்தது.

அந்த நேரத்தில் இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது.. இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம். தமிழ் மாணவர் பேரவை பிறந்தது.

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் நடத்திய மாபெரும் பேரணியை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.

தமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிசாரின் அடாவடியை நேரில் கண்ட பின்னர் தமிழினப் படுகொலைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லும் முயற்சியினால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபாய்கள் விதித்தது

தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரன். சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான்.

எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை அணைத்துக் கொண்டான்.

இவரே எமது விடுதலைப்போராட்டத்தில் முதலில் ஆயுதம் ஏந்தியவரும் சயனைட் அருந்தி வீரமரணம் அடைந்த விடுதலை போராளியுமாகினார்.

இன விடுதலையே மேலென்று எண்ணி தன்னுயிரை ஈந்த எம் மண்ணின் மைந்தனை என்றைக்கும் மறவாமல் அஞ்சலிப்போம்!

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு