ரமழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு

0
664

announcement ceasefire Government Afghanistan Ramadan Tamil news

ஆப்கானிஸ்தான் ரமழான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கனி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

ரமழான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுகிறது. அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வன்முறை மற்றும் போரினால் மக்களின் மனதை வெல்ல முடியாது. மாறாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது மக்களிடம் இருந்து தலிபான்களை இன்னும் அந்நியப்படுத்தவே செய்யும் என்பதை தலிபான் அமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, இந்த தற்காலிக போர் நிறுத்தம் அவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? இல்லையா ? என்பது பற்றி தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

announcement ceasefire Government Afghanistan Ramadan Tamil news

More Tamil News

Tamil News Group websites :